Sunday, 11 December 2011

Use your webcam as a security camera in online

வெப் கேமிரா-வை செக்யூரிட்டி கேமிராவாக நொடியில் மாற்றலாம்.

இணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகிறது அந்த வகையில் இன்று வெப் கேமிராவை எப்படி செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புதிதாக எந்த கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும்  தேவையில்லை எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கேமிராவை செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://cammster.com
இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம் அடுத்து முகப்பு திரையில் இருக்கும்  Protect now என்று  இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கேமிராவை  கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம், ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கேமிராவில் ஏதாவது மாற்றம் ( detects motion ) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு இமெயில் மூலம் அல்லது குறுஞ்செய்தி  மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் ரெக்கார்ட் செய்யப்பட்டு இருக்கும்  நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும்  வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான
லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கேமிராவை கண்காணிப்பு  கேமிராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

zip கோப்புகளின் பிரச்சினையை சரிசெய்து திறக்க உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.

zip கோப்புகளின் பிரச்சினையை சரிசெய்து திறக்க உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.

கோப்புகளின் அளவை குறைக்கவும் பலதரப்பட்ட கோப்புகளை ஒன்றாக சேர்த்து அனுப்பவும் Zip என்ற Compression  method-ஐ தான் நாம் பயன்படுத்துகிறோம் ஆனால் பல நேரங்களில் இப்படி Compress செய்யப்பட்ட கோப்புகள் பிழை செய்தி  கூறி திறக்காமல் இருக்கும். இப்படி திறக்காமல் இருக்கும் கோப்புகளின் பிரச்சினையை சரி செய்து திறப்பதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


சாதாரணமாக நேற்று வரை சரியாக திறக்கும் Zip கோப்புகள் கூட சில நேரங்களில் ஏதோ பிழை என்று செய்தி காட்டி திறக்காமல் இருக்கும் இப்படி வரும் பிரச்சினைகளை சரி செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி : http://www.softworld.com/windows/system-utilities/file-compression/zip2fix/
இத்தளத்திற்கு சென்று Download now  என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து பிழை செய்தி காட்டி திறக்காமல் இருக்கும் zip கோப்புகளை திறந்து பிரச்சினைகளை  எளிதாக சரி செய்யலாம். இந்த மென்பொருள் துணையுடன் பாதிக்கப்பட்ட Zip,SFX போன்றவற்றை எளிதாக சரி செய்யலாம்.வெளிவந்த சில நாட்களிலே பலரது மனது இடம் பிடித்த இந்த மென்பொருள் நம் கணியில் இருந்தால்  பாதிக்கப்பட்டுள்ள Zip கோப்புகளை எளிதாக சரி செய்யலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமிக்கலாம்.

இணையத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமிக்கலாம்.

இணையத்தில் நம் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் இடவசதி செய்கின்றன அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில் ஏதாவது வைரஸ் தாக்குதலினால் தகவல்களை மீட்க முடியாமல் போகலாம், ஆன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் பல தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி:http://cdn.cloud.cm/
இத்தளத்திற்கு சென்று Sign in என்பதை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு  உருவாக்கி கொண்டு நம் தகவல்களை பதிவேற்றலாம், தனித்தினியாக போல்டர் அமைத்து வகைப்படுத்து பதிவேற்றலாம்.ஆடியோ, வீடியோ, பிடிஎப் என அனைத்து வகையான கோப்புகளையும் சேமிக்கலாம்.எந்த நாட்டிற்கு சென்றாலும் கையில் தகவல்களை எடுக்காமல் போனாலும்  கவலை இல்லாமல் இத்தளத்திற்கு சென்று நம் பயனாளர் கணக்கை கொடுத்து எங்கிருந்து வேண்டுமானாலும் நம் தகவல்களை  எடுக்கலாம்.ஆண்டிராய்டு போனில் இருந்தும் பதிவேற்றலாம், பதிவிறக்கும் வசதியும், மேலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளது. 5GB வரை சேமிப்பதற்கு இடம் கொடுக்கும் இந்தத்தளம் தகவல்களை ஆன்லைன் -ல் சேமிக்க உதவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Monday, 17 October 2011

USB PEN Drive , மெமரி கார்டு – ஆயுளை அதிகரிக்கும் பயனுள்ள இலவச மென்பொருள்.

நாம் பயன்படுத்தும் USB பெண்டிரைவ்-களின் தகவல்களை பாதுகாக்கவும் பெண்டிரைவ்களின் ஆயுளை அதிகரிக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருளைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

 



நல்ல நிறுவனத்தின் பெண்டிரைவ் தான் பயன்படுத்துகிறேன் ஆனால் சில நேரங்களில் இந்த பெண்டிரைவ்-ல் சேமிக்கப்படும் தகவல்கள் எடுக்க முடியாதபடி பிழை செய்தி வருகிறது என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு மென்பொருள் வந்துள்ளது.
தறவிரக்க முகவரி : http://www.usbalert.nl/usbalert/download.php
இத்தளத்திற்கு சென்று Setup (install wizard) என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். Portable ஆக வேண்டும் என்றால் Portable என்பதை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கவும் தறவிரக்கி மென்பொருளை இயக்கியதும் நம் டாஸ்க் பாரில் USB Alert ஐகான் வரும்.நம் கணினியில் பெண்டிரைவ் செருகியதும் நமக்கு Alert Message வரும் அடுத்து பெண்டிரைவ்-ல் தகவல்களை சேமித்து முடித்தபின் இந்த USB alert ஐகானை சொடுக்கி Eject என்ற பொத்தானை அழுத்தி பெண்டிரைவ்-ஐ வெளியே எடுக்கலாம். இப்படி எடுப்பதால் பெண்டிரைவ்-ன் ஆயுட்காலாமும் தகவலும் பாதுகாப்பாக சேமிகப்பட்டிருக்கும்.விண்டோஸ் Xp முதல்  விண்டோஸ் 7 வரை பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


Friday, 1 July 2011

mechanical and civil using free cad software(2D)


மெக்கானிக் மற்றும் சிவில் துறையினருக்கு உதவும் அசத்தலான 2D CAD இலவச மென்பொருள்.


தொழில்நுட்ப வரைபடங்கள் , கட்டிடகலை திட்டங்கள் , கிராபிக் வடிவமைப்பு மற்றும் இயந்திர பாகங்களின் வடிவமைப்புக்கு உதவும் ஒரு பயனுள்ள இலவச மென்பொருளைப் பற்றித்தான் இந்தப்பதிவு....
மெக்கானிக் துறையில் டிசைன் என்ற வார்த்தையை கேட்டதும் உடனடியாக கணினியில் என்ன மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள் என்று யாரும் கேட்பதற்கில்லை காரணம் அனைவருக்குமே தெரியும் ஆட்டோகேட் (AutoCAD) மென்பொருள் தான் அது , AutoCad  ஒரு பெரிய கடல் தான் இதில் இருக்கும் பல சேவைகளைக்கூட நாம் இன்றும் பயனபடுத்தாமல் தான் இருக்கிறோம், இந்நிலையில் தொழில்நுட்ப வரைபடங்கள் வரைய ஒரு பயனுள்ள இலவச மென்பொருள் வந்துள்ளது, மென்பொருளின் பெயர்  LibreCAD.

இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பதிப்புகளில் கிடைக்கிறது. நமது சொந்த வேலை மற்றும் அலுவலக வேலைக்கும் இந்த மென்பொருளை இலவசமாக பயன்படுத்திக்கொள்லலாம்

Thursday, 26 May 2011

Angry Birds Game Now Google Chrome

வாரம் லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாசகர்கள் பயன்படுத்தும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம்.

ஐபோன் முதல் ஆண்டிராய்டு வரை உலக அளவில் விளையாட்டு உலகில் சக்கைப்போடு  போட்டுக்கொண்டிருக்கும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



வெளிவந்த சில நாட்களில் அனைவரிடமும் இடம் பிடித்த இந்த கோபமான பறவைகள் தான் இந்த விளையாட்டு ஹீரோக்கள். எளிமையான விதிமுறை பயன்படுத்த எளிமை ஒன்றல்ல இரண்டல்ல முடிவுவே இல்லாமல், போரடிக்காமல் ஒரு விளையாட்டை உருவாக்கி அனைவரிடமும் இடம் பிடித்திருக்கும் இந்த Angry Birds விளையாட்டை ஐபோனில் தான் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றாலும் தற்போது இனி இந்த விளையாட்டை நாம் குரோம் உலாவியிலே விளையாடலாம் நமக்கு உதவுதற்காக கூகிள் குரோம் வெப் ஸ்டோர் இந்த விளையாட்டை அதிகாரப்பூர்வமாக இலவமாகவே கொடுக்கிறது.
இணையதள முகவரி : 

https://chrome.google.com/webstore/detail/aknpkdffaafgjchaibgeefbgmgeghloj?hl=en#


இந்த முகவரியை கூகிள் குரோம் உலாவியில் கொடுத்து வரும் பக்கத்தில் படம் 1-ல் காட்டியபடி  இருக்கும் Install  என்பதை சொடுக்கி இந்த விளையாட்டை நம் குரோம் உலாவியில் நிறுவலாம்.  Angry Birds வெற்றியின் ரகசியம் என்னவென்றால் இந்த விளையாட்டின் ஒவ்வொரு நிலையும் நமக்கு புதுமையாகவும் விளையாட தூண்டும் வண்ணமும் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரிய நிறுவனங்களின் CEO வரை அனைவருக் விளையாடும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டாகவே இது இருக்கிறது. ஒரு வாரத்திற்கு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய பயனாளர்கள் குரோம் உலாவியின் மூலம் பயன்படுத்தும் ஒரு விளையாட்டாகவே இது
இருக்கிறது. Angry Birds ரசிகர்களுக்கு இந்தப்பதிவு மகிழ்ச்சியான பதிவாக இருக்கும்.

Tuesday, 17 May 2011

விக்கிலீக்ஸ் பற்றிய தகவல்களை அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள விக்கிநதி.

விக்கிலீக்ஸ் பற்றிய தகவல்களை அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள விக்கிநதி.
உலகில் இணையதளம் பயன்படுத்தும் அனைவரையுமே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பெருமை விக்கிலீக்ஸ் தளத்திற்கு உண்டு. யாருக்கும் பயப்படாமல் உண்மைய உலகுக்கு ஆதாரத்துடன் நிரூபித்த விக்கிலீக்ஸ் செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அனைவரும் நொடியில் அறிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://wikiriver.org
Wikiriver (விக்கி நதி)என்பது தான் இத்தளத்தின் பெயர் இத்தளத்திற்கு சென்று நாம் தற்போது வெளிவந்துள்ள விக்கிசெய்தி என்னென்ன எத்தனை தளங்களில் இதற்கு தொடர்பான செய்தி வந்துள்ளது. இப்படி வெளிவந்திருக்கும் செய்தி பற்றிய வல்லுனர்களின் கருத்து எந்தெந்த தளங்களில் எல்லாம் வந்திருக்கிறது என்பதை நமக்கு நொடியில் அளிப்பதற்காக இந்ததளம் உருவாக்கப்பட்டுள்ளது. நீரோடையாக ஒரே பக்கத்தில் முன்னனி விக்கி செய்திகளை கொடுக்கிறது அங்கு கொடுத்திருக்கும் இணைப்பை சொடுக்கி ஒவ்வொரு செய்திகள் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம். விக்கிலீக்ஸ் செய்திகளை தேடிக் கண்டுபிடித்து படிப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்தத்தளம் பல நிமிடங்களை மிச்சம் செய்து கொடுக்கும்.

http://wikiriver.org

Saturday, 30 April 2011

CD/DVD Unstoppable Copier-FREEWARE

Unstoppable Copier - எவ்வித தடங்கலுமின்றி பழுதடைந்த கோப்புகளை காப்பி செய்ய

(Recovers files from disks with physical damage. Allows you to copy files from disks with problems such as bad sectors, scratches or that just give errors when reading data. The program will attempt to recover every readable piece of a file and put the pieces together. Using this method most types of files can be made useable even if some parts of the file were not recoverable in the end.

The program can be used as a daily backup system using its batch mode functions. A list of transfers can be saved to a file and then run from the command line to perform the same batch of transfers on a regular basis without having to use the GUI interface. The program supports command line parameters which allow the application to be run from schedulers or scripts so it can be fully integrated into daily server tasks.)


நாம் நிறைய கோப்புகளை CD,DVD மற்றும் வேறு கணிணி பகுதிகளில் இருந்தோ காப்பி செய்யும் போது சில கோப்புகள் பழுதடைந்திருந்தாலோ அல்லது CD,DVD பழுதடைந்திருந்தாலோ நீங்கள் காப்பி செய்யும் போது பாதியில் நின்று விடும்.இது நமக்கு எரிச்சலை தரும்.

இந்த மென்பொருள் பழுதடைந்த கோப்புகளையும் தடங்கலின்றி காப்பி செய்கிறது.முடிந்தவரை பழுதடைந்த கோப்புகளின் பகுதிகளை காப்பி செய்கிறது.எதாவது ஒரு கோப்பு பழுதடைந்து காப்பி செய்ய முடியவில்லை எனில் பாதியிலேயே நின்று விடாமல் மற்ற கோப்புகளை காப்பி செய்து விடுகிறது.

முக்கியமாக பழுதடைந்த CD,DVDகளில் இருந்து கோப்புகளை எடுக்க பெரிதும் உதவுகிறது.இந்த மென்பொருளை இங்கிருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.


http://www.roadkil.net

FREEWARE DVD Flick-ANY VIDEO FORMAT CONVERT TO DVD FORMAT SOFTWARE

DVD Flick - எந்தவொரு வீடியோ கோப்பையும் DVD ஆக மாற்ற

தற்போது நமக்கு வேண்டிய திரைப்படங்களையும்,வீடியோக்களையும் எளிதாக பதிவிறக்கி கொள்கிறோம்.அதை கணிணியிலும் பார்க்கிறோம் இருந்தாலும் TV யில் பார்ப்பதையே பல நண்பர்கள் விரும்புவர்.உங்கள் திரைப்படங்களையும்,வீடியோக்களையும் DVD ஆக மாற்ற இந்த இலவச மென்பொருள் உதவுகிறது.

உங்களுக்கு பிடித்த வீடியோகளை வகைப்படுத்தி DVD ஆக மாற்றி கொள்ளலாம்.


இதில் உங்கள் DVD அளவை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் இதில் DVD மெனுகளை(Menu) உருவாக்கி கொள்ளலாம்.

உங்கள் திரைப்படங்களுக்கு Subtitle இருந்தால் அதையும் இணைத்து கொள்ளலாம்.


மேலும் விபரங்களுக்கு மற்றும் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.


http://www.dvdflick.net

Sunday, 24 April 2011

Portable Freeware Collection

போர்ட்டபிள் பிரீவேர் கலக்ஷன் (Portable Freeware Collection): இலவச புரோகிராம்கள் மற்றும் அவற்றிற்கான அப்டேட் பைல்களைக் காட்டும் தளம் இது. மிகவும் பயனுள்ள தளம். இதன் முகவரி: http://www.portablefreeware.com//

www.portablefreeware.com/

பூமியின் மொத்த மதிப்பு 2 லட்சத்து 16 ஆயிரம் லட்சம் கோடி



பூமி உட்பட கோள்களை கரன்சி மதிப்பில் கணக்கிடும் முறையை விண்வெளி விஞ்ஞானி கிரேக் லாக்லின் கண்டுபிடித்துள்ளார். அவரது கணக்கின்படி, நாம் வாழும் பூமியின் பண மதிப்பு ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் லட்சம் கோடி. கொஞ்சம் தலை சுற்றவே செய்யும். அதாவது 3,000 ட்ரில்லியன் பவுண்டு. (1 ட்ரில்லியன் =1 லட்சம் கோடி) கோள்களின் அளவு, வயது, வெப்பம், உயிரினங்கள், அடர்த்தி  மற்றும் வளங்கள் ஆகியவை அடிப்படையில் மதிப்பை கிரேக் கணக்கிடுகிறார். அதன்படி, பிரபஞ்சத்தில் உள்ள கோள்களிலேயே பூமிதான் விலை மதிப்பில் முதலிடம் வகிக்கிறது. செவ்வாய் கிரகத்தின் மதிப்பு ரூ. 7.2 லட்சம் மட்டுமே.
உலோகத்தில் வெள்ளியே பரவாயில்லை போலிருக்கிறது. ஒரு கிராம் ரூ. 55 வரை விற்கிறது. வெள்ளி கிரகம் ஒரு ரூபாயை விட குறைந்த மதிப்புடன் கடைசி இடத்தில் இருக்கிறது. தவிர, 1,235 கிரகங்கள் உயிரினங்கள் கால் வைக்க முடியாத நிலையில் எல்லா வகையிலும் எதிர்மறை மதிப்பெண்கள் பெறுவதால், அவற்றுக்கு பண மதிப்பே இல்லை என்கிறார் கிரேக்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின் கெப்ளர் விண்கலத்தின் மதிப்பு ரூ. 4,320 கோடி என்ற அடிப்படையில், கிரகங்களின் மதிப்பை கிரேக் கணக்கிட்டுள்ளார்.
கிரகங்களை கண்டுபிடிக்கும் பணியில் இரண்டு ஆண்டுகள் ஈடுபட்ட கெப்ளர் விண்கலத்தின் மதிப்பை வைத்து, பல்வேறு கிரகங்களின் முக்கிய அம்சங்கள் அடிப்படையில் மதிப்பை அவர் நிர்ணயித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இந்த பார்முலாவின்படி விலை மதிக்க முடியாதது எதுவுமில்லை. ஆனால், பூமியைப் போல அதிக மதிப்புள்ள கிரகங்களும் இல்லை என்பதை உணர முடிகிறது’’ என்றார்.

Sunday, 17 April 2011

India Pin Code & India STD Code

India Pin Code & India STD Code

 

இந்தியவில் உள்ள அனைத்து மாநில நகரம் மற்றும் கிராமங்களின் Pin Code-யை சுலபமாக இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


க்ளிக்




___________________________________________



India STD Code
இந்தியவில் உள்ள அனைத்து மாநில நகரம் மற்றும் கிராமங்களின் STD Code-யை சுலபமாக இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.



க்ளிக்




 

Online Marriage Invitation



கல்யாண இன்விடேசன் ஆன்லைன்னில்

 

இது ஆன்லைன் இன்விடேசன் கிரியேட் செய்கிற வலைத்தளம். பிளாக்கர் தளம் மாதிரியே இதுவும் நமக்கு தளத்தைக் கிரியேட் பண்ணிக்கலாம்.. அந்த சைட்ல இன்விடேசன் கிரியேட் பண்றதுக்காக அழகழகான டெம்பிளேட்டுகள் இருக்கு. இந்த முகவரிக்குப் போய் மெம்பர் ஆகி நாம் கிரியேட் பண்ணப்போற ஆன்லைன் இன்விடேசனோட URL கிரியேட் தயார் செய்ய வேண்டும் பின் அதுலவுள்ள டிசைன்களை பார்த்து நமக்கு பிடிச்சமாதிரி இன்விடேசனை தயரிக்க வேண்டும். பிரிமியம் யூசர்க்கு அதிக வசதிகள் உள்ளது.

கல்யாண பத்திரிக்கையை ஸ்கேன் பண்ணி போடலாம், பொண்ணு, மாப்பிள்ளை போட்டோ கேலரி, நம்ம விரும்பறவங்க பார்க்கறதுக்கு வைப்சைட்டை லாக் உபயோகிக்கலாம், நண்பர்கள் வாழ்த்தும் வசதி கல்யாணம் முடிஞ்சு பின்பு எல்லாருக்கும் நம்ம வைப்சைட்ல நன்றி சொல்லாம் இந்த மாதிரி நிறைய வசதிகள் இருக்கு



Anti Mosquito software

கொசு விரட்டும் மென்பொருள்




கொசுக்களை அடிப்பதையும், விரட்டவுன் தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம். கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இயக்கினால் அதில் Active என்பதை கிளிக் செய்தால் இந்த மென்பொருள இயங்க ஆரம்பித்து விடும்.Active என்பதை கிளிக் செய்தவுடன் இந்த மென்பொருள் கொசுவை விரட்டும் அல்ட்ரா ஒலிகளை வெளிபடுத்த ஆரம்பித்து விடும், அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது. இந்த அல்ட்ரா ஒலிகளை நாம் கேட்க முடியாது. INACTIVE கிளிக் செய்து இந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தலாம். மேலும் Hide என்பதை கிளிக் செய்து பின்புலத்தில் இயக்கலாம்.

உங்கள் ஒலிப்பான்களை On செய்து வைத்திருந்தால் வேண்டும்.



DELETE EMPTY FOLDERS OUR COMPUTER


வெற்று போல்டர்களை நீக்க

நமது கணிணியில் சில நேரங்களில் எந்த கோப்புகளும் இல்லாத வெற்று போல்டர்கள் உருவாகிவிடுவதுண்டு.இவற்றை ஒவ்வொன்றாக தேடி அளிப்பது கடினம்.இதற்கு உதவும் மென்பொருளை பற்றி பார்ப்போம்.

vanityremover என்ற இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை.தரவிறக்கிய பிறகு இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.



உங்களது கணிணியில் வெற்று போல்டர்களை நீக்க வேண்டிய பகுதியை(டிரைவ்) கொடுத்தால் போதும். உதாரணமாக C:\,D:\ .


நீங்கள் கொடுத்த டிரைவில் உள்ள அனைத்து வெற்று போல்டர்களையும் நீக்கி விடும்.இந்த மென்பொருளை தரவிறக்க http://vanityremover.codeplex.com/

PDF TO JOG CONVERTER(free software)

PDF to JPG கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்

டாக்குமெண்ட்களை பறிமாறிக்கொள்ள தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் பார்மெட்களில் pdf பார்மெட்டும் ஒன்றாகும். இந்த pdf பைல் பார்மெட் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு சில கணினிகளில் pdf  ரீடர் இருக்காது. அதுபோன்ற கணினிகளில் pdf பைல்களை நம்மால் காண இயலாது. pdf டாக்குமெண்டில் உள்ள தகவல்களை காண நாம் அந்த பைல்களை வேறு ஒரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டும். வேர்ட் மற்றும் இமேஜ் பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய பல வழிகள் உள்ளன.  பிடிஎப் பைல்களை வேர்ட் பார்மெட்டாக கன்வெர்ட் செய்யும் போது பல பிரச்சினைகள் உள்ளன. தமிழ் எழுத்துரு பிரச்சினை வரக்கூடும். இதனால் நம்மால் டாக்குமெண்ட்களை முழுமையாக காண முடியாது. இந்த pdf பைல்களை நாம் இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்யும் போது எந்த வித பார்மெட்டும் மாறாது. இவ்வாறு pdf பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல வழிகள் உள்ளன. நாம் ஆன்லைனில் இருந்தவாறே பைல்களை கன்வெர்ட் செய்ய முடியும். ஆனால் இணைய இணைப்பு இல்லாத கணினிகளில் pdf பைல்களை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் மென்பொருளின் உதவியை நாட வேண்டும்.  pdf பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய இணையத்தில் நிறைய மென்பொருள்கள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் PDF To JPG.
 
மென்பொருளை தரவிறக்க:  http://www.pdfjpg.com/
 
 
 
PDF To JPG Screenshot
 
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து நீங்கள் மாற்ற நினைக்கும் இமேஜ் பைல் பார்மெட்டை தேர்வு செய்து (JPG, TIF, BMP, PNG மற்றும் GIF) பிடிஎப் பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.