Sunday, 11 December 2011

Use your webcam as a security camera in online

வெப் கேமிரா-வை செக்யூரிட்டி கேமிராவாக நொடியில் மாற்றலாம்.

இணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகிறது அந்த வகையில் இன்று வெப் கேமிராவை எப்படி செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புதிதாக எந்த கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும்  தேவையில்லை எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கேமிராவை செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://cammster.com
இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம் அடுத்து முகப்பு திரையில் இருக்கும்  Protect now என்று  இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கேமிராவை  கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம், ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கேமிராவில் ஏதாவது மாற்றம் ( detects motion ) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு இமெயில் மூலம் அல்லது குறுஞ்செய்தி  மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் ரெக்கார்ட் செய்யப்பட்டு இருக்கும்  நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும்  வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான
லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கேமிராவை கண்காணிப்பு  கேமிராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

zip கோப்புகளின் பிரச்சினையை சரிசெய்து திறக்க உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.

zip கோப்புகளின் பிரச்சினையை சரிசெய்து திறக்க உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.

கோப்புகளின் அளவை குறைக்கவும் பலதரப்பட்ட கோப்புகளை ஒன்றாக சேர்த்து அனுப்பவும் Zip என்ற Compression  method-ஐ தான் நாம் பயன்படுத்துகிறோம் ஆனால் பல நேரங்களில் இப்படி Compress செய்யப்பட்ட கோப்புகள் பிழை செய்தி  கூறி திறக்காமல் இருக்கும். இப்படி திறக்காமல் இருக்கும் கோப்புகளின் பிரச்சினையை சரி செய்து திறப்பதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


சாதாரணமாக நேற்று வரை சரியாக திறக்கும் Zip கோப்புகள் கூட சில நேரங்களில் ஏதோ பிழை என்று செய்தி காட்டி திறக்காமல் இருக்கும் இப்படி வரும் பிரச்சினைகளை சரி செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி : http://www.softworld.com/windows/system-utilities/file-compression/zip2fix/
இத்தளத்திற்கு சென்று Download now  என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து பிழை செய்தி காட்டி திறக்காமல் இருக்கும் zip கோப்புகளை திறந்து பிரச்சினைகளை  எளிதாக சரி செய்யலாம். இந்த மென்பொருள் துணையுடன் பாதிக்கப்பட்ட Zip,SFX போன்றவற்றை எளிதாக சரி செய்யலாம்.வெளிவந்த சில நாட்களிலே பலரது மனது இடம் பிடித்த இந்த மென்பொருள் நம் கணியில் இருந்தால்  பாதிக்கப்பட்டுள்ள Zip கோப்புகளை எளிதாக சரி செய்யலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமிக்கலாம்.

இணையத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமிக்கலாம்.

இணையத்தில் நம் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் இடவசதி செய்கின்றன அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில் ஏதாவது வைரஸ் தாக்குதலினால் தகவல்களை மீட்க முடியாமல் போகலாம், ஆன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் பல தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி:http://cdn.cloud.cm/
இத்தளத்திற்கு சென்று Sign in என்பதை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு  உருவாக்கி கொண்டு நம் தகவல்களை பதிவேற்றலாம், தனித்தினியாக போல்டர் அமைத்து வகைப்படுத்து பதிவேற்றலாம்.ஆடியோ, வீடியோ, பிடிஎப் என அனைத்து வகையான கோப்புகளையும் சேமிக்கலாம்.எந்த நாட்டிற்கு சென்றாலும் கையில் தகவல்களை எடுக்காமல் போனாலும்  கவலை இல்லாமல் இத்தளத்திற்கு சென்று நம் பயனாளர் கணக்கை கொடுத்து எங்கிருந்து வேண்டுமானாலும் நம் தகவல்களை  எடுக்கலாம்.ஆண்டிராய்டு போனில் இருந்தும் பதிவேற்றலாம், பதிவிறக்கும் வசதியும், மேலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளது. 5GB வரை சேமிப்பதற்கு இடம் கொடுக்கும் இந்தத்தளம் தகவல்களை ஆன்லைன் -ல் சேமிக்க உதவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.