விக்கிலீக்ஸ் பற்றிய தகவல்களை அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள விக்கிநதி.
உலகில் இணையதளம் பயன்படுத்தும் அனைவரையுமே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பெருமை விக்கிலீக்ஸ் தளத்திற்கு உண்டு. யாருக்கும் பயப்படாமல் உண்மைய உலகுக்கு ஆதாரத்துடன் நிரூபித்த விக்கிலீக்ஸ் செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அனைவரும் நொடியில் அறிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://wikiriver.orgWikiriver (விக்கி நதி)என்பது தான் இத்தளத்தின் பெயர் இத்தளத்திற்கு சென்று நாம் தற்போது வெளிவந்துள்ள விக்கிசெய்தி என்னென்ன எத்தனை தளங்களில் இதற்கு தொடர்பான செய்தி வந்துள்ளது. இப்படி வெளிவந்திருக்கும் செய்தி பற்றிய வல்லுனர்களின் கருத்து எந்தெந்த தளங்களில் எல்லாம் வந்திருக்கிறது என்பதை நமக்கு நொடியில் அளிப்பதற்காக இந்ததளம் உருவாக்கப்பட்டுள்ளது. நீரோடையாக ஒரே பக்கத்தில் முன்னனி விக்கி செய்திகளை கொடுக்கிறது அங்கு கொடுத்திருக்கும் இணைப்பை சொடுக்கி ஒவ்வொரு செய்திகள் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம். விக்கிலீக்ஸ் செய்திகளை தேடிக் கண்டுபிடித்து படிப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்தத்தளம் பல நிமிடங்களை மிச்சம் செய்து கொடுக்கும்.
http://wikiriver.org