Thursday, 26 May 2011

Angry Birds Game Now Google Chrome

வாரம் லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாசகர்கள் பயன்படுத்தும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம்.

ஐபோன் முதல் ஆண்டிராய்டு வரை உலக அளவில் விளையாட்டு உலகில் சக்கைப்போடு  போட்டுக்கொண்டிருக்கும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



வெளிவந்த சில நாட்களில் அனைவரிடமும் இடம் பிடித்த இந்த கோபமான பறவைகள் தான் இந்த விளையாட்டு ஹீரோக்கள். எளிமையான விதிமுறை பயன்படுத்த எளிமை ஒன்றல்ல இரண்டல்ல முடிவுவே இல்லாமல், போரடிக்காமல் ஒரு விளையாட்டை உருவாக்கி அனைவரிடமும் இடம் பிடித்திருக்கும் இந்த Angry Birds விளையாட்டை ஐபோனில் தான் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றாலும் தற்போது இனி இந்த விளையாட்டை நாம் குரோம் உலாவியிலே விளையாடலாம் நமக்கு உதவுதற்காக கூகிள் குரோம் வெப் ஸ்டோர் இந்த விளையாட்டை அதிகாரப்பூர்வமாக இலவமாகவே கொடுக்கிறது.
இணையதள முகவரி : 

https://chrome.google.com/webstore/detail/aknpkdffaafgjchaibgeefbgmgeghloj?hl=en#


இந்த முகவரியை கூகிள் குரோம் உலாவியில் கொடுத்து வரும் பக்கத்தில் படம் 1-ல் காட்டியபடி  இருக்கும் Install  என்பதை சொடுக்கி இந்த விளையாட்டை நம் குரோம் உலாவியில் நிறுவலாம்.  Angry Birds வெற்றியின் ரகசியம் என்னவென்றால் இந்த விளையாட்டின் ஒவ்வொரு நிலையும் நமக்கு புதுமையாகவும் விளையாட தூண்டும் வண்ணமும் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரிய நிறுவனங்களின் CEO வரை அனைவருக் விளையாடும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டாகவே இது இருக்கிறது. ஒரு வாரத்திற்கு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய பயனாளர்கள் குரோம் உலாவியின் மூலம் பயன்படுத்தும் ஒரு விளையாட்டாகவே இது
இருக்கிறது. Angry Birds ரசிகர்களுக்கு இந்தப்பதிவு மகிழ்ச்சியான பதிவாக இருக்கும்.

Tuesday, 17 May 2011

விக்கிலீக்ஸ் பற்றிய தகவல்களை அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள விக்கிநதி.

விக்கிலீக்ஸ் பற்றிய தகவல்களை அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள விக்கிநதி.
உலகில் இணையதளம் பயன்படுத்தும் அனைவரையுமே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பெருமை விக்கிலீக்ஸ் தளத்திற்கு உண்டு. யாருக்கும் பயப்படாமல் உண்மைய உலகுக்கு ஆதாரத்துடன் நிரூபித்த விக்கிலீக்ஸ் செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அனைவரும் நொடியில் அறிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://wikiriver.org
Wikiriver (விக்கி நதி)என்பது தான் இத்தளத்தின் பெயர் இத்தளத்திற்கு சென்று நாம் தற்போது வெளிவந்துள்ள விக்கிசெய்தி என்னென்ன எத்தனை தளங்களில் இதற்கு தொடர்பான செய்தி வந்துள்ளது. இப்படி வெளிவந்திருக்கும் செய்தி பற்றிய வல்லுனர்களின் கருத்து எந்தெந்த தளங்களில் எல்லாம் வந்திருக்கிறது என்பதை நமக்கு நொடியில் அளிப்பதற்காக இந்ததளம் உருவாக்கப்பட்டுள்ளது. நீரோடையாக ஒரே பக்கத்தில் முன்னனி விக்கி செய்திகளை கொடுக்கிறது அங்கு கொடுத்திருக்கும் இணைப்பை சொடுக்கி ஒவ்வொரு செய்திகள் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம். விக்கிலீக்ஸ் செய்திகளை தேடிக் கண்டுபிடித்து படிப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்தத்தளம் பல நிமிடங்களை மிச்சம் செய்து கொடுக்கும்.

http://wikiriver.org