Sunday, 26 February 2012

FREE DOWNLOADING ALL YOUR PHOTOS IN FACEBOOK ALSO DOWNLOAD ALL OF YOUR FRIENDS' PHOTOS

நம் பேஸ்புக் அல்லது நண்பர்களின் பேஸ்புக் -ல் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் எளிதாக சேமிக்கலாம்.

சமூக வலைதளங்களில் வேகமாக வளர்ந்து வரும் பேஸ்புக் தளத்தில் நாம் சேமித்து வைத்திருக்கும் புகைப்பட ஆல்பங்கள் மற்றும் நம் நண்பரின் புகைப்பட ஆல்பங்கள் என அனைத்தையும் எளிதாக நம் கணினியில் சேமித்து வைக்க ஒரு இணையதளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆரம்ப காலத்தில் பேஸ்புக் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள வசதி இல்லாமல் ஏதாவது ஒரு தளத்தில் பகிர்ந்து கொண்டு அதன் இணைப்பை பேஸ்புக்-ல் பயன்படுத்தி வந்தனர் ஆனால் அதன் பின் பேஸ்புக் தளத்தில் புகைப்படங்களை பதிவேற்றலாம் என்ற பின் பலரும் தங்களுடைய புகைப்படங்களை ஆல்பங்களாக மாற்றி சேமித்து வைத்துள்ளனர் இப்படி நாம் அல்லது நம் நண்பர்கள் பேஸ்புக் தளத்தில் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் எளிதாக நம் கணினியில் சேமிக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://facebook2zip.com
இத்தளத்திற்கு சென்று நாம் Login with Facebook என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நம் பேஸ்புக் கணக்கை கொடுத்து உள்நுழைய
வேண்டும் அடுத்து வரும் திரையில் நம் நண்பர்களில் யாருடைய பேஸ்புக் புகைப்பட ஆல்பங்களை தறவிரக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும் அடுத்து குறிப்பிட்ட நண்பர் சேர்த்து வைத்திருக்கும் பல ஆல்பங்களில் நமக்கு ஏது தேவையோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும் அடுத்து வரும் திரையில் இருக்கும் Download என்பதை சொடுக்கி புகைப்படங்களை நம் கணியில் சேமித்து வைக்கலாம். கண்டிப்பாக புதுமை விரும்பிகளுக்கும் பேஸ்புக்-ல் இருந்து புகைப்படங்களை சேமிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.