Thursday, 7 April 2011

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் அனைத்து விபரங்களையும் உடனுக்கூடன் கொடுக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம் -(4)

நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் அனைத்து
முக்கிய விபரங்களையும், எப்படி வாக்களிக்க வேண்டும், வெப்கேமிரா
எங்கு எப்படி அமைக்கப்பட்டு செயல்படுகிறது, தேர்தலில் வாக்காளருக்கு
பணப்பட்டுவாடா செய்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் யாரிடம் புகார்
செய்ய வேண்டும். நம் தொகுதியில் நிற்கும் வாக்காளரின் சொத்து
மதிப்பு எவ்வளவு இது போன்ற அனைத்து விபரங்களையும் பொதுமக்கள்
அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு தேர்தல்
ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்படுகிறது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
வாக்களிப்பது நம் குடியுரிமை இதை யாருக்காகவும் எதற்காகவும்
எப்போதும் நாம் விட்டுவிடக்கூடாது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்
அனைத்து விபரங்களையும் கொண்ட அதிகாரப்பூர்வ  இணையதள முகவரி :
http://www.elections.tn.gov.in/default.htm
http://www.elections.tn.gov.in/eroll/
http://www.elections.tn.gov.in/AssemblyElections2011.htm
இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு எந்த வாக்குச்சாவடியில் வாக்கு
இருக்கிறது, நம் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்றும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து
புகார்களும் அளிக்க வேண்டிய அதிகாரியின் போன் எண் என்ன
என்பதையும், இன்று வரை யார் எல்லாம் நம் தொகுதியில்
வாக்காளராக நிற்கின்றனர் இவர்களின் சொத்துமதிப்பு உள்ளிட்ட
அனைத்து விபரங்களையும் நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
“தேர்தல் பற்றிய விழிப்புணர்வை” மக்களிடம் பரப்புவதற்காக
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ள வீடியோவையும்
இத்துடன் இணைத்துள்ளோம். நம் தேசத்தின் மேல் நமக்கு
இருக்கும் பற்றை காட்ட கண்டிப்பாக வாக்குரிமை உள்ள நாம்
அனைவரும் இந்தியத்தாயின் மைந்தனாக வாக்களிப்போம்

http://www.elections.tn.gov.in/default.htm
http://www.elections.tn.gov.in/eroll/
http://www.elections.tn.gov.in/AssemblyElections2011.htm

EX: details of an Electer--
http://www.elections.tn.gov.in/eroll/

No comments :

Post a Comment