Vector படங்கள் மற்றும் Clipart படங்களை தேட எளிய பயனுள்ள தேடுபொறி.
ஆன்லைன் மூலம் ஒரு படம் அல்லது Clipart தேடவேண்டும்என்றால் கூகிளில் சென்று தேடினால் கூட சரியானதை பெற
முடியாமல் இருக்கும் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணைய உலகில் பல தேடுபொறிகள் இருந்தாலும் பிரத்யேகமாக
Vector படங்களை தேடுவதற்காக மட்டும் ஒரு இணையதளம்
உள்ளது. சரியாக நாம் தேடும் Vector படங்கள் முதல் Clipart வரை
அனைத்தையுமே ஒரே தளத்தில் இருந்து நமக்குத் தேடித்தர
இந்தத்தளம் நமக்கு உதவி செய்கிறது.
இணையதள முகவரி : http://www.vectorfinder.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் தேட விரும்பும் Vector படங்களின்
பெயரை இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து
Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அதே திரையில்
நமக்கு நாம் தேடிய வார்த்தையில் இருக்கும் Vector மற்றும்
Clipart படங்களை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. படங்களை
தேடி இனி ஒவ்வொரு தளமாக செல்லவேண்டாம் ஒரே தளத்தில்
இருந்து நாம் தேட விரும்பும் அனைத்து படங்களையும் எளிதாக
பெறலாம். கண்டிப்பாக அனைத்து துறையில் இருப்பவர்களுக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்
http://www.vectorfinder.com
No comments :
Post a Comment