Thursday, 7 April 2011

7 in 1 search engine -(6)

தேடுபொறியில் தேடும் வார்த்தைக்கு உதவிய செய்ய 7 பிரம்மாண்டங்கள் இணைந்த ஒரே தளம்.

தேடுபொறி என்றதும் நாம் உடனடியாக உடனடியாக சொல்வது கூகிள்
மட்டும் தான் ஆனாலும் பல தேடுபொறிகள் கூகிளிடம் இல்லாத
தகவல்களையும் நமக்கு கொடுக்கிறது, இதற்காக  நாம் ஒவ்வொறு
தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் இருந்து கொண்டு
நாம் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது இண்ஸ்டன்ட் ஆக
தேடி ஒரே தளத்தில் கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு
7 பிரம்மாண்ட தளங்களின் துணையுடன் நாம் தேடும் வார்த்தைக்கே
உதவி செய்ய ஒரு தளம் இருக்கிறது. கூகிள்,யாகூ,ஆஸ்க்,
விக்கிப்பிடியா,அன்சஸ்வர்ஸ்.கொம், யூடியுப்,அமேசான் போன்ற
அனைத்திலும் இண்ஸ்டண்ட் ஆக தேடக்கூடிய வார்த்தைக்கு
உதவி செய்கிறது.
இணையதள முகவரி : http://www.soovle.com
இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான
வார்த்தையை கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடுபொறியிலும்
எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைகான
Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம்
எந்ததளத்தில் தேடவேண்டுமோ அந்த தளத்தை சொடுக்கி
நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம், தேடுவதற்கு நேரம்
இல்லை என்று சொல்லும் அனைவருக்கும் இந்தததளம்
தேடும் நேரத்தை மிச்சப்படுத்திக்கொடுக்கும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை.

http://www.soovle.com

No comments :

Post a Comment